திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 3 ஜூலை 2018 (13:30 IST)

நடத்தையில் சந்தேகம் - மனைவிக்கு மொட்டை அடித்த கணவன்

உத்திரபிரதேசத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகித்த கணவன், அவருக்கு மொட்டையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரை சேர்ந்த ராஜூ. இவருக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியுள்ளது. அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகித்த கணவன் அவரிடம் அவ்வப்போது சண்டையிட்டு வந்துள்ளார்.
 
இதனால் வெறுப்படைந்த அவனது மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். சில நாட்களுக்குப் முன்னர், ராஜூ தனது மனைவியிடம் சென்று சமாதானம் பேசி அவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் நேற்று ராஜு அவனது சகோதரனுடன் சேர்ந்து, தன் மனைவிக்கு மொட்டை அடித்துள்ளான். இதனால் அதிர்ந்து போன ராஜூவின் மனைவி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் ராஜூவை தேடி வருகின்றனர்.