1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 2 ஜனவரி 2018 (12:36 IST)

விவாகரத்து தர மறுத்த மனைவியை கொடூரமாகத் தாக்கிய கணவன்

உத்தரபிரதேசத்தில் விவகாரத்தை ஏற்க மறுத்த மனைவியை அவரது கணவன் பிளேடால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சாம்ரோகா என்ற கிராமத்தில் வசித்து வரும் ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்றது முதலே அந்த பெண்ணின் கணவன், அவரை கொடுமைபடுத்தி வந்துள்ளான். சூதாட்டத்திற்கு அடிமையான அவரது கணவன், மனைவியிடம் அடிக்கடி வரதட்சனை கேட்டு கொடுமைபடுத்தி வந்துள்ளான். அதற்கு மறுப்பு தெரிவித்த மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்து, அவரிடம் விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்து போடும் படி கேட்டுள்ளான் அப்பெண்ணின் கணவன்.
 
இதனையடுத்து அவர் விவாகரத்து தர மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த அந்த மிருகம், கட்டின மனைவி என்றும் பாராமல் அவரின் அந்தரங்க உறுப்புகளை பிளேடால் அறுத்துள்ளான். இதனால் படுகாயமடைந்த பெண்ணை அவரது பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் அவரது கணவன் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.