புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 4 டிசம்பர் 2018 (08:36 IST)

லீக் ஆன மணமகளின் ’அந்த’ புகைப்படம்: கடைசி நேரத்தில் தெறித்து ஓடிய மணமகன்

கர்நாடகாவில் திருணம் நடைபெற இருந்த அந்த நேரத்தில், மணமகனுக்கு வந்த மெசேஜால் மணமகன் தனது கல்யாணத்தை நிறுத்திவிட்டார்.
கர்நாடகாவில் சக்லேஷ்பூர் என்ற இடத்தில் தாரேஷ் என்ற நபருக்கும் ஸ்ருதி என்ற பெண்ணிற்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது.
 
இந்நிலையில் தாரேஷ் ஸ்ருதி திருமணம் நடைபெற சில நிமிடங்களே இருந்த நேரத்தில் தாரேஷ் போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஸ்ருதி ஒரு நபருடன் நெருக்கமாக போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார். இதனைப்பார்த்து ஷாக் ஆன தாரேஷ் உடனடியாக கல்யாணத்தை நிறுத்தினார்.
பின்னர் தான் தெரிந்தது, இந்த வேலை அனைத்தையும் செய்தது ஸ்ருதியின் காதலன் அபிலேஷ் என்று. இதையடுத்து அதே மணமேடையில் ஸ்ருதிக்கு அபிலேஷுடன் திருமணம் நடைபெற்றது. இதில் அனைவரும் புத்திசாலியாக நடந்துகொண்டனர். முட்டாளாக்கப்பட்டது தாரேஷும் அவரது வீட்டாரும் தான். திருமணம் பிடிக்கவில்லை என்றால் முதலில் சொல்வதை விட்டுவிட்டு இவ்வாறு நடந்துகொள்வது எந்த விதத்தில் நியாயம் என தெரியவில்லை.