1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 21 ஏப்ரல் 2018 (18:31 IST)

அம்பானி மருமகளுக்காக ரூ.50 லட்சத்தில் தயாராகும் தங்க சேலை

உலகின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவர் இந்தியாவின் முமேஷ் அம்பானி. இவரது மகன் ஆகாஷ் அம்பானிக்கும் பிரபல வைர வியாபாரி ரஸ்ஸல் மேத்தா அவர்களின் மகள் ஸ்லோகோ மேத்தாவுக்கும் சமீபத்தில் கோவாவில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் வரும் டிசம்பரில் நடைபெறும் என தெரிகிறது.
 
இந்த நிலையில் சென்னை அருகேயுள்ள காஞ்சிபுரத்தில் அம்பானி மருமகளுக்காக ரூ.50 லட்சத்தில் தங்கத்தில் பார்டர் போட்ட பட்டுச்சேலை தயாராகி வருகிறதாம். ரூ.50 லட்சம் மதிப்புள்ள இந்த சேலையை 36 நெசவாளார்கள் இரவு பகலாக ஒருசில மாதங்களாக நெய்து வருகின்றனர். இந்த சேலை இன்னும் ஒருசில மாதங்களில் முழு வடிவம் பெறும் என கூறப்படுகிறது
 
மேலும் இந்த சேலைக்கு பொருத்தமாக வைரத்தால் ஆன பிளவுஸ் தயாராகி வருகிறதாம். இந்த சேலையும் பிளவுசும் அணிந்தால் ஸ்லோகோ மேத்தா ஒரு தேவதை போல் மின்னுவார் என்று கூறப்படுகிறது.