ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2019 (14:46 IST)

சபரிமலை பக்தர்களோடு நடைபயணம் செல்லும் நாய்! – ஆச்சர்யமளிக்கும் வீடியோ!

சபரிமலை அய்யப்பன் கோவில் செல்லும் பக்தர்களோடு 480 கி.மீ தூரத்திற்கு நாய் ஒன்று பயணித்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தற்போது கார்த்திகை மாதம் தொடங்கிவிட்ட நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் பலர் மாலை போட்டுக்கொண்டு பயணித்து வருகின்றனர். சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்குக்காக நடை திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆந்திர பிரதேசத்தின் திருமலை பகுதியிலிருந்து 13 அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்துக் கொண்டு நடைப்பயணமாகவே சபரிமலைக்கு புறப்பட்டுள்ளனர். அப்போது அவர்களை நாய் ஒன்று பின் தொடர்ந்து வந்திருக்கிறது. சிறிது தூரத்தில் நின்று விடும் என்று பார்த்தால் தொடர்ந்து வந்து கொண்டே இருந்திருக்கிறது.

பக்தர்கள் செல்லும் வழியும் சமைக்கும் உணவுகளை சாப்பிட்டுக்கொண்டு அவர்களோடே 480 கி.மீ தொடர்ந்து பயணம் செய்து வந்துள்ளது. பக்தர்களோடு நாயும் சபரிமலைக்கு பாத யாத்திரையாக செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.