செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 6 ஜூன் 2019 (18:35 IST)

குடி போதையில் மகள்: கொன்று போட்ட அப்பா

உத்தர பிரதேசத்தில் மது குடித்துவிட்டு வந்த மகளை கோபத்தில் கொன்று போட்ட தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தர பிரதேசம் முசாஃபர்நகரை சேர்ந்தவர் வீர்பால். இவருக்கு 22 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர் அடிக்கடி வீட்டிற்கு மது அருந்திவிட்டு வந்ததால் அவரது அப்பா அவரை கண்டித்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஒருநாள் வீர்பாலின் மகள் கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் அதிகம் மது குடித்திருந்ததாக கூறப்படுகிறது. அதிகமான போதையில் அவர் கால்வாயில் தவறி விழுந்திருக்கலாம் என கூறி அதை யாரும் பெரிதுபடுத்தவில்லை.

அந்த பெண்ணுக்கு அர்ஜுன் சிங் என்றொரு காதலர் இருந்திருக்கிறார். அவர் வீர்பாலின் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். போலீஸ் விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட வீர்பால் தன் மகள் அதிகம் மது அருந்தியதால் தனக்கு அவமானமாக இருந்ததாகவும், குடும்ப மானத்தை காக்க மகளை கால்வாயில் தள்ளிவிட்டு கொன்றதாகவும் கூறியுள்ளார்.