1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 5 ஜூன் 2019 (19:04 IST)

பிரபல கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை – கொந்தளிப்பில் மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் 2019 மக்களவை தேர்தல் தொடங்கிய நாள் முதற்கொண்டே திரிணாமூல் காங்கிரஸாருக்கும், பாஜகவுக்கும் இடையே பெரும் மோதல்கள் நடந்து வருகின்றன.

தேர்தல் முடிவுகளில் பாஜக மேற்கு வங்கத்தில் 18 இடங்களை மட்டுமே பெற்றிருந்தாலும் அது பெறும் முன்னேற்றமாகவே அக்கட்சிக்கு இருக்கிறது. பாஜக பிரமுகர் ஒருவர் சுட்டுகொல்லப்பட்ட வழக்கில் ஏற்கனவே பாஜகவினர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மீது குற்றச்சாட்டை வைத்தனர். தொடர்ந்து மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்ட கூட்டத்தில் பாஜகவினர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழங்கியது அடுத்த பிரச்சினையானது.

இப்படியே தொடர்ந்த பிரச்சினைகளின் தொடர்ச்சியாக வடக்கு கொல்கத்தாவில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் நிர்மல் குண்டு என்பவரை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி சென்றனர். இதில் பலத்த காயமடைந்த நிர்மல் குண்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது பாஜகவினரின் வெறிசெயல்தான் என திரிணாமூல் காங்கிரஸார் குற்றம் சாட்டியுள்ளனர். போலீஸார் அந்த பகுதியில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை கொண்டு கொலையாளிகளை கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர்.

தொடர்ந்த இந்த படுகொலையால் பாஜக – திரிணாமூல் காங்கிரஸ் இடையேயான பிரச்சினை மேலும் வலுத்துள்ளது.