வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 டிசம்பர் 2023 (13:28 IST)

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதில் மத்திய அமைச்சர்? மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டதா?

new parliament  India
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய அமைச்சர் ஒருவர் நியமனம் செய்யும் மசோதா ஒன்று மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர் நியமனங்கள், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவி காலம் குறித்த மசோதாவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் அதிகாரிகள் நியமனம் செய்வதற்கான தேர்வு குழுவில் இதுவரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இருந்தார். இந்த நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய அமைச்சர் ஒருவர் அந்த குழுவில் இடம் பெறும் வகையில் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 
 
மத்திய அரசு திருத்தம் செய்த இந்த மசோதா இன்று மாநிலங்களவையில்  விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்கட்சிகளின் ரியாக்சன் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Mahendran