வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 22 மே 2018 (11:12 IST)

தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி சரியா? குமாரசாமிக்கு எதிராக மனுதாக்கல்

கர்நாடக மாநிலத்தின் தேர்தல் முடிவுகளின்படி பார்த்தால் மக்களின் விருப்பத்திற்கு எதிராக ஒரு ஆட்சி அமைவதாக அரசியல் விமர்சகர்க்கள் ஏற்கனவே கருத்து கூறி வரும் நிலையில் நாளை பதவியேற்கவுள்ள குமாரசாமிக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
கர்நாடக தேர்தலில் மொத்தமுள்ள 222 தொகுதிகளில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்த மூன்று கட்சிகளும் மும்முனை போட்டியில் போட்டியிட்டதால் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிட்டனர்.
 
இந்த தேர்தலின் முடிவுகளை வைத்து பார்க்கும்போது 118 தொகுதி மக்கள் பாஜகவுக்கு எதிராகவும், 144 தொகுதி மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், 185 தொகுதி மக்கள் மஜத கட்சிக்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர். ஆனால் அதிகமான மக்கள் எதிர்த்து வாக்களித்த கட்சியின் தலைவர் ஒருவர் முதல்வராகவுள்ளார்.
 
இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி அகில பாரத ஹிந்து மகா சபா அமைப்பு சார்பில்  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கபடுவதால் நாளைய குமாரசாமியின் பதவியேற்பு விழாவுக்கு பிரச்சனை ஏற்படுமா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது.