1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Indian Share Market Sees Decline After Monday's Gains

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

Share market
நேற்று வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை சென்செக்ஸ் சுமார் 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், இன்று திடீரென பங்குச்சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 250 புள்ளிகள் சரிந்து 81,545 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 82 புள்ளிகள் சரிந்து 24,803 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச் சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஹெச்.சி.எல். டெக்னாலஜி, ஹீரோ மோட்டார்ஸ், ஜியோ பைனான்ஸ், கோடக் மகேந்திரா வங்கி, ஸ்டேட் வங்கி, டெக் மகேந்திரா, பஜாஜ் ஃபின்சர்வ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி ஆகிய பங்குகளின் விலைகள் குறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி! தமிழகத்திற்கு காத்திருக்கும் மழை! - வானிலை ஆய்வு மையம்!