வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 22 ஜூலை 2023 (21:12 IST)

ஆற்று வெள்ளத்தில் சிக்கிய பயணிகளுடன் சென்ற பேருந்து ....வைரலாகும் வீடியோ

flood
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக குஜராத், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், இதனால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த  நிலையில் உத்தரபிரதேச மாநிலம் நஜிபாபாத்தில் இருந்து ஹரித்துவாருக்கு 36 பயணிகளுடன் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, பிஜ்னூர் கோட்வாலி ஆற்றின் ஏற்பட்ட வெள்ளத்தில், பயணிகள் பேருந்து சிக்கிக் கொண்டது.

இந்தச் சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். சிலர், பேருந்தின் மேற்கூரையின் மீது ஏறி தங்களைக் காப்பாற்றும்படி கூச்சலிட்டனர்.

இதுபற்றித் தகவல் அறிந்த மண்டவாலி போலீஸார், ஹரித்துவார், பிஜ்னூரில் இருந்து மீட்புபடையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பாலத்தில் கிரேன் பொருத்தப்பட்டு, பேருந்தில் வெள்ளத்தில் சிக்கிய பயணிகளை மீட்டனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.