ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 2 ஜூலை 2018 (10:53 IST)

எனக்கே வழி விட மாட்டியா? நடுரோட்டில் கார் டிரைவரை கொடூரமாக தாக்கிய பாஜக எம்.எல்.ஏவின் மகன்

ராஜஸ்தானில் தனக்கு வழி விடாததால் முன்னாள் சென்ற கார் டிரைவரை வழி மறித்து பாஜக எம்.எல்.ஏ வின் மகன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் பன்ஸ்வாரா தொகுதியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ தன் சிங் ராவட்டின் மகனான ராஜா தனது நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார். அப்போது அவரது காருக்கு முன்னாள் வேறு காரில் சென்ற நபர் ராஜாவிற்கு வழி விடாமல் சென்றுள்ளதாக தெரிகிறது.
 
இதனால் ஆத்திரமடைந்த ராஜா அந்த காரை வழி மறித்து அந்த காரின் டிரைவரை அடித்து காரிலிருந்து வெளியே இழுத்து அவரை கடுமையாக தாக்கினார். அவருடன் வந்த நபர்களும் அந்த டிரைவரை தாக்கினர். பின் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
 
எம்.எல்.ஏ வின் மகன் இதுபோன்ற அராஜக சம்பவத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸாரும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.