வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: சனி, 30 ஜூன் 2018 (15:59 IST)

சைடு கேப்பில் உள்ளே நுழைய முற்படும் எடியூரப்பா - கர்நாடக அரசியலில் பரபரப்பு

காங்கிரஸ் - மஜத மீது அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏக்களை அவர்களின் வீட்டிற்கே சென்று பாஜகவிற்கு வருமாறு அழைப்பு விடுங்கள் என கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.
 
கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் ஒருநாள் முதல்வராக இருந்த பாஜகவை சேர்ந்த எடியூரப்பா ராஜினாமா செய்தார். மேலும் காங்கிரஸ் மஜத வுடன் கூட்டணி அமைத்து, பின் மஜத தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றார்.
 
இதனையடுத்து இலாகா ஒதுக்குவதிலும், அமைச்சர் பதவி பிரித்ததிலும் காங்கிரஸ் - மஜதவினரிடையே மோதல் இருந்தது. இருந்தபோதிலும் அந்த பிரச்சனை பேசி முடிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் - மஜத எம்.ஏ.க்கள் பலர் அக்கட்சியின் மீது அதிருப்திக்கு ஆளானர். குமாரசாமி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என சித்தராமையா கூறியதால் காங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில் பெங்களூருவில் பாஜக செயற்குழுக்கூட்டத்தில் பேசிய எடியூரப்பா, பாஜக ஆட்சியில் அமரவே மக்கள் விரும்பினர், ஆனால் மக்களின் விருப்பத்திற்கு எதிராக இந்த ஆட்சி அமைந்து விட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் காங்கிரஸ் - மஜத மீது அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏக்களை அவர்களின் வீட்டிற்கே சென்று பாஜகவிற்கு வருமாறு அழைப்பு விடுங்கள் என கூறினார். பின் அதற்கு அவசியம் இருக்காது என்றும் பொருந்தாத கூட்டணியால் அரசு விரைவில் கவிழும் என்று பகிரங்கமாக கூறினார்.