கசமுசா மெசேஜ்: அதிர்ந்துபோன ஆசிரியை: கம்பி எண்ணும் கல்லூரி மாணவன்

phone
Last Modified சனி, 15 டிசம்பர் 2018 (15:23 IST)
கல்லூரி ஆசிரியைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய மாணவனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை அயனாவரத்தை சேர்ந்த கல்லூரி ஆசிரியை ஒருவன் செல்போன் எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலம் தொடர்ச்சியாக ஆபாச எஸ்.எம்.எஸ்கள் வந்த வண்ணம் இருந்தன.
 
பொறுத்து பொறுத்து பார்த்த ஆசிரியை இதுகுறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இந்த கீழ்த்தரமான வேலையை செய்தவனை கண்டுபிடித்தனர்.
 
ராஜேஷ், ஆகாஷ் ஆகிய இருவரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரித்ததில் ஆகாஷ் கல்லூரியில் படித்து வருகிறான் என தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அவர்களை சிறையில் அடைத்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :