திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 8 ஜூலை 2018 (13:25 IST)

தந்தையின் துப்பாக்கிக்கு இரையாகிய 13 வயது சிறுவன்

பஞ்சாப்பில் தந்தையின் துப்பாக்கியை எடுத்து விளையாடிய சிறுவன் அதிலிருந்த குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
பஞ்சாப்பை சேர்ந்தவர் ரவிந்தர் சிங் பாபி. இவர் அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்து வருகிறார்.
 
இந்நிலையில் ரவிந்தர், தனது 13 வயது மகன் அஹ்ரானுடன் கோடை விடுமுறைக்காக உத்தரகாண்ட் சென்றுள்ளார். காரில் சென்ற ரவிந்தர், தன் இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காரில் உள்ள பெட்டியில் வைத்துள்ளார்.
 
இதனை பார்த்த அஹ்ரான், தந்தை வெளியே சென்ற நேரத்தில் பெட்டியில் இருந்த துப்பாக்கியை எடுத்து விளையாட்டாக சுடவே குண்டு சிறுவன் மீது பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தான்.
 
இதனால் அதிர்ந்துபோன ரவிந்தர் மகனின் உடலைக் கண்டு கதறினார். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்துவந்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மகன் இறந்த துக்கத்தில் உள்ள ரவிந்தரை, சிறுவன் கண்ணில் படும் படி துப்பாக்கியை வைத்தது தவறு என பலர் திட்டி வருகின்றனர்.