செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 2 ஜூலை 2018 (20:16 IST)

சிறுவனை நிர்வாணமாக்கி தலைகீழாக கட்டி வைத்து அடித்த கொடூரன்!

உத்திர பிரதேச மாநிலம் பிரோசாபாத்தில் இரும்பு குழாய்களை சேமித்து வைக்கும் கிடங்கு ஒன்று உள்ளது. இந்த கிடங்கில் இருந்து இரும்பு குழாய்களை திருடியதாக 14 வயது சிறுவன் ஒருவனை நிர்வாணமாக்கி தலைகீழாக கட்டி வைத்து அடித்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இரும்பு குழாய்களின் திருட்டு குறித்து கிடங்கின் உரிமையாளர் முதலில் போலீஸாரிடம் புகார் அளித்த நிலையில், ஆதாரம் இல்லாத காரணத்தால் போலீஸார் இந்த புகாரை நிராகரித்தனர். 
 
ஆனால், ஆத்திரம் அடங்காத அந்த கிடங்கின் முதலாளி சிறுவனை கிடங்கிற்குள் அழைத்து சென்று நிர்வாணமாக்கி, தலைகீழாக கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளார். 
 
இந்த செயலை பார்த்த மற்ற தொழிலாளர்கள் இதனை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டதால் போலீஸார் அந்த கிடங்கின் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.