மகனை வைத்து மகளை கற்பழித்து, ஆசிட் ஊற்றி சிதைத்து கொன்ற தாய்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மகனை வைத்து மகளை கற்பழித்து அவளது உடலை ஆசிட் ஊற்றி சிதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் இதனை அந்த சிறுமியின் தாய் முறையான ஒருவர் செய்தது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் தனது 9 வயது மகள் காணாமல் போனதாக காவல் நிலயத்திற்கு புகார் ஒன்று வந்துள்ளது. இதனை பற்றிய விசாரணையில் இறங்கிய போலீஸாருக்கு பெரும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளியாகியது.
காணாமல் போன சிறுமியின் தந்தைக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரு மகனும், இரண்டாவது மனைவிக்கு ஒரு மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் தனது கணவர் இரண்டாவது மனைவியின் குழந்தை மீது அதிக பாசமாக இருந்ததால், முதல் மனைவி கணவரோடு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இரண்டாவது மனைவியின் மகளை கடத்தி காட்டுபகுதிக்கு அழைத்து சென்று தனது 14 வயது மகனை வைத்து அந்த சிறுமியை கற்பழிக்க செய்துள்ளார் முதல் மனைவி. அதோடு சேர்த்து அந்த சிறுமியை கொலை செய்து ஆசிட் ஊற்றி உடலை சிதைத்துள்ளார்.
விசாரணையில் இந்த செய்தி வெளியானதும் போலீஸாரே அதிர்ச்சி ஆகியுள்ளனர். மகள் முறையான சிறுமியை கொடூரமாக கொலை செய்த இந்த சம்பவம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.