8வது ஊதியக்குழுவில் அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு.. எப்போது முதல் கிடைக்கும்?
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் 8-வது ஊதியக்குழு அமைப்பதற்கான காலக்கெடுவை நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
2025ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று முறையாக அமைக்கப்பட்ட இந்த ஊதியக்குழு, தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க 18 மாத கால அவகாசம் பெற்றுள்ளது. இதன்படி, ஜனவரி 1, 2026 முதல் புதிய ஊதிய விகிதம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், நடைமுறையில் ஊழியர்களின் வங்கி கணக்கிற்கு இந்த உயர்வு வந்து சேர 2026-27 நிதியாண்டு வரை ஆகலாம்.
இருப்பினும், ஜனவரி 1 முதல் கணக்கிடப்பட்டு நிலுவைத்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய கணிப்புகளின்படி, ஊதிய உயர்வு 20% முதல் 35% வரை இருக்கலாம் என்றும், ஃபிட்மென்ட் ஃபேக்டர் 2.4 முதல் 3.0 வரை அமையலாம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதுகுறித்த கருத்துக்களை பெற MyGov போர்ட்டலில் மார்ச் 31 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் மற்றும் பொருளாதார சூழலை பொறுத்தே இறுதி முடிவு எடுக்கப்படும்.
Edited by Siva