கர்நாடகாவில் 7000ஐ நெருங்கியது இன்றைய கொரோனா பாதிப்பு!

Corona virus - vaccine
கர்நாடகாவில் 7000ஐ தாண்டியது இன்றைய கொரோனா பாதிப்பு!
siva| Last Updated: புதன், 7 ஏப்ரல் 2021 (21:25 IST)

தமிழகம் மட்டுமின்றி தமிழகத்தின் அண்டை மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 7000ஐ நெருங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கர்நாடகாவில் இன்று புதிதாக 6,976 பேருக்கு கொரோனா பாதிப்பு உருவாகியுள்ளதாகவும் இன்று மட்டும் குறைந்தது 35 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் கர்நாடக மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்து 33 ஆயிரத்து 560 எனவும் மொத்த பலி எண்ணிக்கை 12 ஆயிரத்து 731 ஆக உயர்ந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று மட்டும் 2796 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் தற்போது சுமார் 50,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைகள் இருப்பதாகவும் அவர்களில் 393 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதுஇதில் மேலும் படிக்கவும் :