திங்கள், 2 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (09:22 IST)

700 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது பிளிப்கார்ட்

700 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது பிளிப்கார்ட்
பிளிப்கார்ட் நிறுவனம் செலவுகளை குறைத்து சிறப்பாக செயல்பட 700 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.


 

 
இந்தியாவின் மிகப்பெரிய முன்னிலை இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் , தனது நிறுவனத்தின் செலவுகளை குறைப்பதற்கும், சிறப்பாக செயல்படுவதற்கும், சிறப்பாக பணிபுரியாத 700 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
 
இதுகுறித்து பிளிப்கார்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-
 
சிறப்பாக செயல்படாத பணியாளர்களுக்கு, பணித்திறமையை மேம்படுத்த வாய்ப்பு வழங்கப்படும். அதன்பிறகும் செயல்படாத பணியாளர்கள், வெளியே வாய்ப்புகளை தேடிக்கொள்ள வேண்டும். 
 
இதை பிளிப்கார்ட் நிறுவனம் மட்டும் செய்யவில்லை. சந்தையில் அனைத்து நிறுவனங்களும் கடைப்பிடிப்பதுதான். மேலும் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு பதவி உயர்வுகளும், சம்பள் உயர்வும் வழங்கப்பட்டுள்ளது, என்று கூறினார்.