1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 5 அக்டோபர் 2016 (16:36 IST)

பெங்களூரில் சரிந்த 7 அடுக்கு மாடி கட்டிடம்: சிக்கி தவிக்கும் மக்கள்

பெங்களூரில் 7 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் ஒருவர் பலியானார். கட்டிட சரிவில் ஏராளமானோர் சிக்கி தவிக்கின்றனர்.


 

 
பெங்களூர் நகர், பெளந்தூர் பகுதியில் அதிக அளவில் ஐ.டி. தொழில் நிறுவனங்கள் உள்ளன. பெளந்தூர், பெங்களூர் நகரின் புது பகுதியாகும். அங்கு குடியிருப்பு உள்ள இடத்தில் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. 
 
அந்த கட்டிடம் திடீரென்று சரிந்தது. இதில் ஒருவர் பலியானார். சுமார் 6க்கும் மேற்பட்டோர் கட்டிட சரிவில் சிக்கியுள்ளனர். காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் கட்டிட சரிவில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.