செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 12 மே 2019 (07:22 IST)

இன்று 6ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளின் விபரங்கள்

இந்தியாவில் மக்களவை தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் ஏற்கனவே ஐந்து கட்ட தேர்தல் முடிந்துவிட்டது. அதனையடுத்து இன்று ஆறாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு சில நிமிடங்களுக்கு முன் தொடங்கியது.
 
இன்று 7 மாநிலங்களில் 59 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகளில் தேர்தல் என்பதை பார்ப்போம்
 
1. டெல்லி: 7 தொகுதிகள்
2. மேற்குவங்காளம்: 8 தொகுதிகள்
3. உத்தரபிரதேசம்: 14 தொகுதிகள்
4. மத்தியபிரதேசம்: 8 தொகுதிகள்
5. ஜார்கண்ட்: 4 தொகுதிகள்
6. ஹரியானா: 10 தொகுதிகள்
7. பீகார்: 8 தொகுதிகள்
 
மேற்கண்ட ஏழு மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளிலும் 10 கோடியே 17 லட்சத்து 82 ஆயிரத்து 472 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்பதும், ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 167 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இதனையடுத்து கடைசி கட்ட தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறும். அதில் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். மே 23ஆம் தேதி அனைத்து தொகுதி வாக்குகளும் எண்ணப்படும்