வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 5 ஏப்ரல் 2021 (08:24 IST)

இந்தியாவில் 7 கோடியே 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி !

இதுவரை இந்தியாவில் 7 கோடியே 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல். 

 
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே ஒரு நாள் கொரோனா பாதிப்பு இந்தியாவில் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், அமைச்சர் ஹர்ஷ் வர்தன், கொரோனா பரிசோதனை ஆய்வகம் 2,000 ஆக அதிகரித்துள்ளதாகவும், கொரோனா காலத்தில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் 150 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 7 கோடியே 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், 6 கோடியே 50 லட்சம் டோஸ் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.