செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 22 ஜூலை 2020 (07:27 IST)

ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேர் கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சியில் கிராமம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ள சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்துள்ளதால் அந்த கிராமத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
ஜார்கண்ட் மாநிலத்தில்  88 வயதான ஒரு பெண் சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு திருமணத்திற்கு சென்று வந்தார். அதன்பின் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு சிகிச்சையின் பலனின்றி ஜூலை 4ஆம் தேதி மரணம் அடைந்தார். எ
 
88 வயதான அந்த பெண்மணிக்கு ஐந்து மகன்கள் இருந்தனர். ஐந்து மகன்களுக்கும் அடுத்தடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டு முதல் மகன் முதலில் இறந்ததாகவும், இதனையடுத்து ஒருசில நாட்களில் அடுத்தடுத்து நான்கு மகன்களும் இறந்ததாகவும் தெரிகிறது
 
கொரோனாவிற்கு 88 வயது பெண் மற்றும் அவருடைய ஐந்து மகன்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் அடுத்தடுத்து இறந்ததால் அந்த கிராம மக்களை பீதிக்குள்ளாக்கி உள்ளது. இதனையடுத்து ஜார்கண்ட் மாநில சுகாதாரத்துறை அந்த கிராமம் முழுவதையும்ம் சீல் வைத்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது