செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 22 ஜூலை 2020 (19:10 IST)

ஆந்திராவில் ஒரே நாளில் 6,045 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் இந்தியாவில் தற்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11.60 லட்சத்தைத் தாண்டிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸ் தாக்கம் உச்சம் பெற்று வருகிறது. அந்த வகையில் இன்றும் அம்மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டு புதிய உச்சம் எண்ணிக்கை ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இன்று ஒரே நாளில் 6,045 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தி ஆந்திராவில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பெரும் அதிர்ச்சியான செய்தியாக உள்ளது. இன்று ஆந்திராவில் 6,045  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64,713 என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த எண்ணிக்கை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் ஆந்திராவில் இன்று மட்டும் கொரோனாவால் 65 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதும், இதுவரை ஆந்திராவில் கொரோனாவில் இருந்து 32,127பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது