புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 9 ஜூன் 2021 (17:05 IST)

ரயில்வே துறையில் 5 ஜி இணையதள சேவை .... மத்திய அரசு ஒப்புதல்

ரயில்வே துறையில் 5 ஜி இணையதள சேவை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

உலகம் முழுவதும் மொபைல் சேவையில் 4ஜி சேவையை அடுத்து 5ஜி  சேவை அதிகம் கவனம் பெறத் தொடங்கிவிட்டது.

5ஜி சேவை ஏற்கனவே சீனா,அமெரிக்கா,உள்ளிட்ட நாடுகளில் செயல்பாட்டில் உள்ள நிலையில் இந்தியாவில் இந்த சேவை எப்போது வரும் என மக்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

சமீபத்தில் 5 ஜி சேவைக்கு எதிராக  வழக்குத் தொடுத்த பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லாவுக்கு ரூ.20 லட்சம்  அபராதம் விதித்து, அவரது வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

இந்நிலையில், இந்தியாவில் ரயில்வே துறையில் 5ஜி சேவை இணையதள வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே துறையை நவீனமாக்க ரூ.25 ஆயிடம் கோடி செலவிடப்படும்ம் எனவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.