1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 18 ஜனவரி 2023 (10:04 IST)

தமிழ்நாட்டில் 16 நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவை: ஜியோ அறிவிப்பு

internet
இந்தியாவில் 5ஜி சேவை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட நிலையில் ஏற்கனவே சென்னை மும்பை கொல்கத்தா டெல்லி பெங்களூர் உள்பட பல நகரங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல் 16 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படுவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் 16 நகரங்களிலும் மொத்தம் 134 நகரங்களிலும் இன்று முதல் 5ஜி சேவையை தொடங்க இருப்பதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் இன்று 5ஜி சேவை தொடங்க இருக்கும் நகரங்களில் மதுரை கோவை கோவை முத்தூர் திருச்சி திருப்பூர் உள்ளிட்ட நகரங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் ஆந்திரா,  கர்நாடகா, தெலுங்கானா, , உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் இன்று ஜியோ 5 ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva