1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 29 ஜனவரி 2024 (14:54 IST)

காலியாகும் 56 ராஜ்ய சபா உறுப்பினர் பதவி..! பிப்.27 ஆம் தேதி தேர்தல்.!!

election commision
15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நாடாளுமன்ற மக்களவைக்கு வருகிற ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
 
இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 


அதன்படி,  ஆந்திராவில் 3 இடங்களுக்கும், பீகாரில் 6 இடங்களுக்கும், சத்தீஸ்கரில் 1 இடத்திற்கும், குஜராத்தில் 4 இடங்களுக்கும், அரியானா,  இமாச்சலப் பிரதேசத்தில் தலா 1 இடங்களுக்கும், கர்நாடகாவில் 4 இடங்களுக்கும், மத்திய பிரதேசத்தில் 5 இடங்களுக்கும், மகாராஷ்டிராவில் 6 இடங்களுக்கும், தெலுங்கானாவில் 3 இடங்களுக்கும், உத்திரபிரதேசத்தில் 10 இடங்களுக்கும், உத்தரகாண்டில் 1 இடத்திற்கும், மேற்கு வங்கத்தில் 5 இடங்களுக்கும், ஒடிசாவில் 3 இடங்களுக்கும், ராஜஸ்தானில் 3 இடங்களுக்கும் என மொத்தம் 56 மாநிலங்களை உறுப்பினர் பதவிகளுக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.