வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 4 நவம்பர் 2020 (17:27 IST)

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிற்வன் – மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்!

மத்திய பிரதேச மாநிலத்தில் 100 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 3 வயது சிறுவன் ஒருவன் விழுந்தது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் நிவாடி மாவட்டத்தில் இருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ளது புராபுஜுர்க் என்ற கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த குஷ்வாஹாவின் மகன் பிரஹ்லாத் என்ற 5 வயது சிறுவன் புதிதாக தோண்டப்பட்டு மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறுதலாக விழுந்துள்ளார்.

கிணற்றில் 100 அடியில் தண்ணீர் உள்ளதால் சிறுவன் எத்தனை அடி ஆழத்தில் சிக்கியுள்ளார் என்பது தெரியவில்லை. அவனை மீட்கும் பணிகள் இன்று அதிகாலையில் இருந்து நடந்து வருகின்றன.