திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 19 பிப்ரவரி 2018 (13:43 IST)

ஆந்திராவில் மர்மான முறையில் 5 தமிழர்கள் மரணம்!

ஆந்திராவில் உள்ள ஒண்டிமிட்டா பகுதி ஏரியில் பிணமாக மீட்கப்பட்ட 5 தமிழர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.


 
 
ஆந்திர மாநிலம் கடப்பா அருகே ஒண்டிமிட்டா ஏரியில் 5 பேரின் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட உடல்கள் குறித்து போலீசார் விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் இறந்த 5 பேரும் தமிழகத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் என தெரியவந்தது.
 
இதில் 3 பேர் சேலம் மாவட்டத்தையும், 2 பேர் விழுப்புரம் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் செம்மரம் வெட்டுவதற்காக சென்றபோது வனத்துறையினரால் கொல்லப்பட்டனரா அல்லது தப்பிக்க முயன்ற போது அடித்துத்துக் கொலை செய்யப்பட்டனரா என்ற கோணத்தில் விசாரணை நடை பெற்று வருகிறது.
 
இந்நிலையில் இன்று கடப்பா அரசு மருத்துவமனையில் 5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.