ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 17 மே 2016 (17:53 IST)

8 பச்சிளம் குழந்தைகள் மரணம் - போதிய மருத்துவர்கள் இல்லையா?

ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் 8 பச்சிளம் குழந்தைகள் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

 
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள ஜவஹர்லால் நேரு அரசு மருத்துவமனையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இரண்டு தினங்களில் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.
 
இந்நிலையில் உடல்நிலை மோசமான நிலையிலே குழந்தைகளை பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்த குழந்தைகள் குறை மாத பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று ஜவஹர்லால் நேரு  மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி கே.கே. சோனி தெரிவித்துள்ளார்.
 
ஆனால், மூச்சுத் திணறல் போன்ற உடல் உபாதைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காததே காரணம் என்று குழந்தைகளின் பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர்.
 
இந்நிலையில் இரவு நேரங்களில் போதிய மருத்துவர்கள் இல்லாததே குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.
 
இதனைத் தொடர்ந்து பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த 3 மருத்துவர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.