1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 6 மார்ச் 2023 (09:59 IST)

நாடகம் பார்க்க சென்ற இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 5 சிறுவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

rape
சத்தீஸ்கர் மாநிலத்தில் நாடகம் பார்க்கச் சென்ற இளம்பெண்ணை ஐந்து சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தார் என்ற மாவட்டத்தில் சமீபத்தில் திருவிழா நடந்த போது நாடகம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் நாடகம் பார்ப்பதற்காக இளம் பெண் ஒருவர் தனியாக சென்று விட்டு பின்னர் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது ஏழு பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை ஆளில்லாத பகுதிக்கு கடத்திச் சென்று மாறி மாறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். இதில் 5 பேர்கள் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
 
இந்த நிலையில் இளம் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஐந்து சிறுவர்கள் உள்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இளம்பெண்ணை 5 சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva