1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 10 ஏப்ரல் 2023 (08:12 IST)

ஒரே சிறையில் 44 கைதிகளுக்கு எய்ட்ஸ்: சிறை அதிகாரிகள் அதிர்ச்சி..!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எய்ட்ஸ் நோய் மிக வேகமாக பரவிய நிலையில் தற்போது அந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில் ஒரே சிறையில் இருக்கும் 44 கைதிகளுக்கு எய்ட்ஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹல்த்வானி என்ற சிறையில் பல கைதிகள் இருக்கும் நிலையில் அந்த சிறையில் ஒரு பெண் கைதி உள்பட 44 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சிறை அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
தற்போது இந்த சிறையில் 1629 ஆண் கைதிகளும் 70 பெண் கைதிகளும் உள்ளனர். சிறையில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தகவல் கூறி வரும் நிலையில் தற்போது சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு  எய்ட்ஸ் பரவி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva