1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 22 செப்டம்பர் 2021 (10:53 IST)

4 உயிரை பறித்த செல்பி - ஆற்றில் மூழ்கிய பரிதாபம்

இமாச்சல பிரதேசத்தில் செல்பி மோகத்தால் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
இமாச்சல பிரதேசத்தில் இன்று நான்கு பேர் உயிரை பறித்துள்ளது. அம்மாநிலத்தின் குலு மாவட்டம் பஹாங் என்ற இடத்தில் ஓடும் ஆற்றக்கரையோரம் நின்று அம்மா, மகன் மற்றும் இரு சுற்றுலாப் பயணிகள் என நான்கு பேர் செல்பி எடுத்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து நீரில் மூழ்கி  உயிரிழந்துள்ளனர். 
 
உலக அளவில் செல்பி எடுக்க முயன்று பலியானவர்களின் எண்ணிக்கையில் இந்தியா தான் அதிகம் என ஆய்வு ஒன்று முன்னர் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.