கொதிக்கும் சாம்பாரில் விழுந்த குழந்தை: துடிதுடித்து இறந்த பரிதாபம்!
கொதிக்கும் சாம்பாரில் விழுந்த குழந்தை: துடிதுடித்து இறந்த பரிதாபம்!
கர்நாடக மாநிலம் மைசூரில் 3 வயது குழந்தை ஒன்று கொதிக்கும் சாம்பாரில் விழுந்து பரிதாபமாக துடிதுடித்து இறந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
மைசூரின் விஜயநகரில் கவிதா என்ற பெண் ஒரு ஹோட்டலில் பாத்திரம் கழுவும் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 3 வயதில் கிருஷ்ணா என்ற ஆண் குழந்தை ஒன்று உள்ளது. குழந்தையை கவனிக்க வீட்டில் யாரும் இல்லாததால் அவர் குழந்தையை தினமும் தான் வேலை செய்யும் ஹோட்டலுக்கு அழைத்து சென்றுவிடுவார்.
இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை ஹோட்டல் சமையலறையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரில் எதிர்பாராத விதமாக விழுந்துள்ளது. இதனையடுத்து அலறிய குழந்தையின் சத்தம் கேட்டு ஓடிய பணியாளர்கள் குழந்தையை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் குழந்தையின் உடலில் தீக்காயம் அதிகமாக இருந்ததால் பல்வேறு சிகிச்சைகள் அளித்தும் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹோட்டல் நிர்வாகமும் உயிரழந்த குழந்தைக்கு இழப்பீடு தருவதாக உறுதியளித்திருக்கிறது.