1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 29 மார்ச் 2021 (06:40 IST)

பாஜக தொண்டர்களை தாக்கிய 3 போலீஸார் சஸ்பெண்ட்: ஒருவர் இடமாற்றம்!

உத்தரபிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களை தாக்கியதாக 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா என்ற பகுதியில் கும்பமேளாவையொட்டி ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிலர் யமுனை நதியில் நீராடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போலீஸ்காரர்கள் சில அறிவுரைகளை கூறியதாக தெரிகிறது
 
இதனையடுத்து போலீசாருக்கும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தொண்டர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் போலீஸ்காரர் ஒருவரை பாஜக தொண்டர் ஒருவர் தாக்கியது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 
 
இந்த நிலையில் போலீசாரை கண்டித்து ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் தர்ணாவில் ஈடுபட்டதை அடுத்து 3 போலீசார்களை மாநில அரசு சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் ஒருவர் இட மாற்றம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் அதே நேரத்தில் போலீசாரிடம் தகராறு செய்த பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அவர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது