வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 7 நவம்பர் 2017 (10:46 IST)

2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிப்பு: மீண்டும் ஒத்திவைப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்பட பலர் குற்றம்சாட்டப்பட்டுள்ள் 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி நவம்பர் 7ஆம் தேதி அதாவது இன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தீர்ப்பு தேதி திடீரென டிசம்பர் மாதம் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


 
 
இதுகுறித்து 2ஜி வழக்கை விசாரித்து வரும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி.ஷைனி சற்றுமுன்னர் இதனை தெரிவித்தார். இன்னும் இந்த வழக்கின் தீர்ப்பு தயாராகததால் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
 
இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என்று கூறப்படும் 2ஜி வழக்கில் அரசுக்கு ஒரு லட்சத்து 76ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கடந்த 2010ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 7ஆண்டுகள் நடைபெற்று தற்போது தீர்ப்பை நெருங்கியுள்ளது