வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 27 மே 2024 (08:43 IST)

தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி அறிவிப்பு.. 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

கேரளாவில் மே 31ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில் கேரளாவில் உள்ள ஆறு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் மே 31ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

இதனை அடுத்து கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட ஆறு மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 மேலும் கேரளாவில் இதுவரை பெய்த மழை காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 59 பேர் வீடுகளை முழுமையாகவும் 539 பேர் வீடுகளை பகுதியாகவும் இழந்துள்ளனர் என்றும் தொடர் மழை பெய்வதால் கட்டுப்பாட்டு அறைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் கேரளா அரசு தெரிவித்துள்ளது

Edited by Siva