ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 2 மார்ச் 2021 (18:18 IST)

ராமர் கோவிலுக்கு வந்த ரூ.2000 கோடி பணம் குறித்த திடுக்கிடும் தகவல்!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நிதி திரட்டும் பணியில் ராமர் கோயில் அறக்கட்டளை குழுவினர் ஈடுபட்டிருக்கும் நிலையில் தற்போது ரூபாய் 2000 கோடி குறித்த தகவல் வெளிவந்துள்ளது 
 
அயோத்தியில் ராமர் கோயில் வசூலிக்கப்பட்ட பணத்தில் 2000 கோடி காசோலைகள் அதன் கணக்குகளில் பணம் இல்லாமல் திரும்பி விட்டதாகவும், 6000 காசோலைகளில் எழுத்துப்பிழை உள்ளிட்ட கோளாறுகளால் பணம் எடுக்க முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் கட்டும் பணிக்கான அறக்கட்டளை இந்த தகவலை தெரிவித்துள்ளது 
 
மேலும் ராமர் கோயில் நிதிக்காக கட்டுவதற்கான நிதிக்காக வந்த பல காசோலைகளில் பின்புறம் அந்த காசோலையை அளித்தவரின் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன் உதவியால் அறக்கட்டளை ஊழியர்கள் அவர்களிடம் பேசி இந்த பிரச்சனைகளை சரி செய்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் ராமர் கோயில் கட்டுவதற்காக ஏராளமான காசோலைகள் குவிந்துள்ளதால் இன்னும் பல காசோலைகள் பிரிக்கப்படாமல் இருப்பதாகவும் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது