திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 11 ஜனவரி 2023 (17:35 IST)

ஒவ்வொரு வீட்டிற்கும் 200யூனிட் இலவச மின்சாரம்- காங்கிரஸ் தலைவர் வாக்குறுதி

கர்நாடக மாநிலத்தில் தற்போது பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

கர்நாடக  மாநில அரசியலில் எப்போதும் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என்பதால், அங்குள்ள அரசியல் நிலவரம் விமர்சனர்களால் கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்திதில் இந்த வருடம் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளதால், காங்கிரச், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து இதில், ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், காங்கிரஸ் கட்சி இந்திய மக்களுக்கு செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கு உறுதி அளித்துள்ளதாகவும், காங்கிரஸை மீண்டும் ஆட்சியில் அமரவைத்தால், ஒவ்வொரு வீட்டிற்கும் 200யூனிட் இலவச மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.