இந்தியாவில் 200 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு: எந்தெந்த மாநிலத்தில் எத்தனை பேர்?
இந்தியாவில் 200 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் சமீபத்தில் இந்தியாவில் நுழைந்தது என்பதும் படிப்படியாக இந்தியாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வகையில் இந்த நிலையில் தற்போது இந்தியாவில் மொத்தம் 200 பேர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 54 பேர்கள், டெல்லியில் 54 பேர்கள், தெலுங்கானாவில் 20 பேர்கள், ராஜஸ்தானில் 18 பேர்கள், கர்நாடகாவில் 19 பேர்கள், கேரளாவில் 15 பேர்கள், குஜராத்தில் 14 பேர்கள், உத்திரப்பிரதேச 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி உள்ளது
ஆந்திரா தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் தலா ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது