ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 7 மார்ச் 2017 (11:34 IST)

பிளாஸ்டிக் கவரில் கட்டி சாக்கடையில் 19 பெண் சிசுக்கள்!!

பிளாஸ்டிக் கவரில் கட்டி சாக்கடையில் வீசப்பட்ட 19 பெண் சிசுக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
மகாராஷ்டிர மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 
 
அப்போது, அதில் உயிரிழந்த இளம்பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதையும், அந்த பெண் சிசு சாக்கடையில் வீசப்பட்டதையும் காவல்துறையினர் கண்டறிந்தனர். 
 
இதை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டதில் கருச்சிதைவு செய்யப்பட்ட 19 பெண் சிசுக்கள் ஒரு பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டது தெரியவந்துள்ளது.
 
அந்த சாக்கடை மருத்துவமனைக்கு பின்புறமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை அடுத்து, மருத்துவர் பாபா சாஹேப் கித்ராபூர் கருச்சிதைவு செய்யப்பட்ட பெண் சிசுக்களை பிளாஸ்டிக் பைகளில் கட்டி வீசுவதை வழக்கமாக கொண்டிருந்தார் என்று தெரிய வந்துள்ளது. போலீஸ் தலைமறைவான அந்த மருத்துவரை தேடி வருகிறது.