ஜம்மு-காஷ்மீர் மக்கள் பக்ரித் பண்டிகையை கொண்டாடுவார்களா?
செப்டம்பர் 13ஆம் தேதி பக்ரித் பண்டிகையை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 144 தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அம்மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளது.
மத்திய அரசு இதுகுறித்து அம்மாநில அரசுக்கு அனுப்பி உள்ள அறிக்கையில் கூறியதாவது, “பக்ரித் திருநாளில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், அன்றைய தினத்தில் ஸ்ரீநகரில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிடவும் பிரிவினைவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.
அதனால், செப்டம்பர் 13ஆம் தேதி காஷ்மீரில் வன்முறை ஏற்படாமல் இருக்க ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 144 தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும்” என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதனால் பக்ரித் பண்டிகையை ஜம்மு-காஷ்மீர் மாநில மக்கள் கொண்டாடுவார்களா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.