1300ஐ தாண்டிய கேரள கொரோனா பாதிப்பு: அதிர்ச்சியில் முதல்வர் பினராயி விஜயன்!

kerala
1300ஐ தாண்டிய கேரள கொரோனா பாதிப்பு
Last Updated: வெள்ளி, 31 ஜூலை 2020 (20:45 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று கேரளாவில் ஆயிரத்து 300 தாண்டிய பாதிப்பு உள்ளதால் அம்மாநில முதல்வர் அதிர்ச்சி அடைந்துள்ளார்

கேரளாவில் இன்று 1,310 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அங்கு குறைவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,310 ஆக உயர்ந்துள்ளது மேலும் இன்று மட்டும் கொரோனாவால் 4 பேர் பலியாகி உள்ளனர் என்பதால் அம்மாநிலத்தின் மொத்த பலி எண்ணிக்கை 74 என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் என்று கூறுவதிலிருந்து 864 குணமாகி இருப்பதாகவும் கேரளாவில் குணமான மொத்த எண்ணிக்கை 13,027 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கேரளாவில் 10,495 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தினமும் 1300 தாண்டி விட்டதால் கேரள அரசு கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :