செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (11:37 IST)

டிராக்டர் விபத்து: 12 விவசாயிகள் பரிதாப பலி

தெலுங்கானாவில் விவசாயிகளை ஏற்றி சென்ற டிராக்டர் நிலைதடுமாறு கால்வாயில் விழந்து விபத்துக்குள்ளானதில் விவசாயிகள் 12-பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 
 
தெலுங்கானவை சேர்ந்த தொழிலர்கள் விவசாயம் பார்பதற்காக தினமும் டிராக்டர் டிரெய்லரில் வேலைக்கு செல்வார்கள். அதன்படி இன்று புலிசேர்லா என்ற கிராமத்திற்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது, டிராக்டர் நிலைதடுமாறி கால்வாயில் விழுந்தது.
 
இதனால் விவசாயிகள் தண்ணீர் முழ்கினர், பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அப்பகுதி மக்களின் உதவியுடன் மீட்பு பணியில் இறங்கினர். அப்போது காவல்வாயில் 12 பேர் சடலமாக உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.