புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 28 ஜூலை 2020 (10:46 IST)

117 வயதிலும் வருமான வரி கட்டும் மூதாட்டி – ஆச்சர்யத் தகவல்!

இந்தியாவிலேயே மிக அதிக வயதில் வருமான வரி கட்டும் பெண்ணாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கிரிஜா பாய் என்ற மூதாட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய வருமான வரித்துறையின் 160 ஆவது ஆண்டு கொண்டாடப்பட்டுள்ள நிலையில் 100 வயதுக்கு மேல் வரி கட்டுபவர்கள் கௌரவிக்கப்படுகின்றனர். அதை முன்னிட்டு மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கிரிஜா பாய் என்ற 117 வயது மூதாட்டி இந்தியாவில் மிக அதிகவயதில் வரி கட்டுபவராக தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் தனது வைப்புத் தொகை மீதான வட்டி மற்றும் ஓய்வூதியத்தை தனது வருமானமாக காட்டி அதற்காக வரி கட்டியுள்ளார். இவரைத் தவிர 100 வயதுக்கு மேற்பட்ட மேலும் இரு மூதாட்டிகளும் இதுபோல கௌரவிக்கப்பட்டுள்ளனர்.