புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (13:38 IST)

100வது பிறந்த நாளில் மனைவியை மீண்டும் திருமணம் செய்த முதியவர்: பேரன், பேத்திகள் வாழ்த்து!

100வது பிறந்த நாளில் மனைவியை மீண்டும் திருமணம் செய்த முதியவர்: பேரன், பேத்திகள் வாழ்த்து!
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது நூறாவது பிறந்த நாளில் மனைவியை மீண்டும் திருமணம் செய்து கொண்டு உள்ளதை அடுத்து அவருக்கு அவரது பேரன்கள் பேத்திகள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 
 
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பிஸ்வானந்த் சாகர் என்பவர் இன்று தனது 100வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை அடுத்து அவருக்கு அவரது குடும்பத்தினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர் 
 
இந்த நிலையில் தனது நூறாவது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட விரும்பிய முதியவர் தனது மனைவியை அவர் மீண்டும் திருமணம் செய்துகொண்டார். மாலை அணிவித்து மீண்டும் தாலி கட்டி பொட்டு வைத்த நிலையில் அவருக்கு அவருடைய மகன்கள் மகள்கள் பேரன் பேத்திகள் கொள்ளுப்பேரன் ஆகியோர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் 
 
இந்த திருமணத்தை அந்த முதியவர் தனது வீட்டிலேயே எளிமையாக நடந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.