10 நாட்கள் அரசியலுக்கு விடுமுறை - அரவிந்த் கெஜ்ரிவால்

10 நாட்கள் அரசியலுக்கு விடுமுறை - அரவிந்த் கெஜ்ரிவால்

Dinesh| Last Modified வெள்ளி, 29 ஜூலை 2016 (16:18 IST)
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் மோடி அரசுக்கும், கடும் மோதல் நிலவி வருகிறது.


 
பல்வேறு வழக்குகள் தொடர்பாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-க்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டுவரும் நிலையில், பதிலுக்கு, கெஜ்ரிவால், ”ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் நல்ல பலத்துடன் இருப்பதால்  மோடி என்னை கொலை கூட செய்ய முயற்சி செய்யக்கூடும்” என்று கூறு வந்தார்.
 
இப்படி இருவரும் போட்டி போட்டு ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், இது போன்ற தொல்லைகள் இல்லாமல் இருக்க அரவிந்த் கெஜ்ரிவால், அரசியலுக்கு முழுக்கு போட்டு, பத்து நாட்கள் யோக வகுப்பிற்கு செல்கிறார். அந்த 10 நாட்கள் வெறும் அமைதிமட்டுமே இருக்கும், நாட்டு நடப்பு எதுவும் தெரிந்து கொள்ள முடியாது. யாரும் அவரை தொடர்பு கொள்ள முடியாது. நாளை முதல் இந்த விபாசனா யோக வகுப்பிற்கு செல்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.இதில் மேலும் படிக்கவும் :