1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By J.Durai
Last Updated : சனி, 10 ஆகஸ்ட் 2024 (12:55 IST)

"வீராயி மக்கள்" திரை விமர்சனம்!

ஒயிட் ஸ்கிரீன் பிலிம்ஸ் - சுரேஷ்  நந்தா தாயரித்து
நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்"வீராயி மக்கள்"
 
இத் திரைப்படத்தில்
வேல ராமமூர்த்தி, மாரிமுத்து, தீபா சங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ராமா, செந்தில் குமாரி ஜெரால்டு மில்டன், பாண்டி அக்கா உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.
 
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள தீயத்தூர் என்ற கிராமத்தில்  வசிக்கும் ஏழை விதவைத் தாய் வீராயி.
 
மூத்த மகன் வேல ராமமூர்த்தி, இரண்டாவது மகன் மாரிமுத்து, மூன்றாவது மகன் ஜெரால்டு மில்டன், மகள் தீபா சங்கர் ஆகியோர்கள் ஆவர்.
 
அண்ணன் வேல ராமமூர்த்தியும், தம்பி மாரிமுத்துவும் ஒரு வருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் பகையோடு  ஒரே தெருவில் தனித்தனியே வசித்து வருக்கின்றனர்.
 
இதே போல்  இவர்களது பிள்ளைகளும் பகை உணர்வோடு இருக்கின்றார்கள்  இந்த நிலையை மாற வேண்டு என்ற எண்ணத்தில் வேல ராமமூர்த்தியின் இளைய மகன் நாயகன் சுரேஷ் நந்தா முயற்சிக்கிறார்.
 
அவரது முயற்சியினால் பிரிந்த அண்ணன் தம்பி உறவுகள் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா என்பது தான் படத்தின் மீதி கதை.
 
உறவுகளின் பிரிவும் அதனால் ஏற்படும் வலியையும்,
பிரிந்த உறவுகளை நினைத்து பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் நாகராஜ் கருப்பையா.
 
வேல ராமமூர்த்தியின்  கம்பீர தோற்றமும், உடன் பிறந்தவர்கள் பிரிந்து செல்லும் வேதனையை தாங்கி கொள்ள முடியாமல்  தனது கண்களால் பேசும் நடிப்பு  சிறப்பு.
 
வேல ராமமூர்த்தியின் தம்பியாக நடித்திருக்கும் மாரிமுத்து, தனது  நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்தியுள்ளார்.
 
நாயகனாக நடித்திருக்கும் சுரேஷ் நந்தா, தனது காதா பாத்திரத்திற்கேற்றார் போல் சிறப்பாக நடித்துள்ளார்.
 
நாயகியாக நடித்திருக்கும் நந்தனா, கிரமாத்து காதல் காட்சிகளுக்கு ஏற்ற முகம்  நாடிப்பிலும் அசத்தியுள்ளார்.
 
தீபா சங்கர் அண்ணன் பாசத்திற்கு ஏங்குவதாக திரையில் தோன்றும் முதல் காட்சியில் இருந்து அனைத்து காட்சிகளும் அழுகாச்சி தான் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்.
 
மாரிமுத்துவின் மனைவியாக நடித்திருக்கும் செந்தி குமாரி, கணவரின் உடன் பிறந்தவர்கள் ஒன்று சேரவே கூடாது என்று போடுற சாபம் மற்றும் அவரது நடிப்பு சூப்பர்.
 
வேல ராமமூர்த்தியின் மனைவியாக நடித்திருக்கும் ரமாவின் நடிப்பு  நன்றாக  இருக்கிறது.
 
ஜெரால்டு மில்டன், பாண்டி அக்கா என மற்ற கதா பாத்திரத்தில்  நடித்திருப்பவர்கள் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர்.
 
இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தியின் இசையில் வரும் பாடல்கள் அழகிய ஒரு கிராமத்திற்கே நம்மை அழைத்து செல்கிறது.
 
ஒளிப்பதிவாளர் எம்.சீனிவாசன் கேமரா கண்கள்  கிராமத்தை  அழகாக படம் பிடித்துள்ளது.
 
மொத்தத்தில் ‘வீராயி மக்கள்’ குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்