புதன், 4 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 3 ஜூன் 2024 (15:21 IST)

எதிர்நீச்சல் சீரியலின் கிளைமேக்ஸ் ஷூட்டிங்… படக்குழு வெளியிட்ட க்ரூப் போட்டோ!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் டி ஆர் பி ரேட்டிங்கில் உச்சம் தொட்டது. சமீபத்தில் இந்த சீரியல் 9.3 என்ற புள்ளியை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர் சீரியல் குழுவினர். இந்நிலையில் இப்போது இந்த சீரியல் 500 ஆவது எபிசோட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியல் தமிழில் அடைந்த வெற்றியை அடுத்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி மற்றும் மராத்தி என ஐந்து மொழிகளில் டப் ஆகி ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

இந்த சீரியலின் இமாலய வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் அதில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்துவின் அட்டகாசமான நடிப்புதான். அவர் சமீபத்தில் மறைந்ததை அடுத்து அந்த கதாபாத்திரத்தில் நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதன் பின்னர் இந்த சீரியல் முன்பு போல வெற்றிகரமாக ஓடவில்லை. சீரியலின் டி ஆர் பி யும் குறைந்தது.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளாக ஓடிவந்த இந்த சீரியல் இப்போது முடியவுள்ளது. அதற்கான கடைசி கட்ட ஷூட்டிங் சமீபத்தில் திருநெல்வேலியில் படமாக்கப்பட்டுள்ளது. க்ளைமேக்ஸ் காட்சியின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இப்போது படக்குழு வெளியிட்டுள்ளனர்.